‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த நவ.23 ஆம் தேதி வெளியானது.
அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் (மம்மூட்டி) தன் மனைவி ஓமணா (ஜோதிகா) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஒருநாள், தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்புகையில் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார்.
ஆனால், அடுத்த சில நாள்களில் அவருக்கு எதிராக அவர் மனைவி விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். விவாகரத்துக்குக் காரணமாக, ஜார்ஜ் கடந்த சில ஆண்டுகளாக தங்கன் என்பவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார் எனக் குறிப்பிடுகிறார். இந்தக் குழப்பங்களிலிருந்து ஜார்ஜ் எப்படி மீள்கிறார், தன்பாலின உணர்வாளர்களின் குடும்பத்தினர் அவர்களை எப்படி எதிர்கொள்கின்றனர் என்கிற கேள்விகளுடன் உருவாகியிருக்கிறது காதல் - தி கோர்.

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை: மன்சூர் அலிகான்
உலகளவில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றதுடன் இதுவரை ரூ.10 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கேரள கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த அமைப்பின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “காதல் தி கோர் திரைப்படம் கிறிஸ்துவ உணர்வுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களைக் காட்சிப்படுத்த கத்தோலிக்க கிறிஸ்துவ நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.” எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இந்தக் கதைக்கு ஏன் கிறிஸ்துவ பின்னணியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதால் கத்தார், குவைத் மற்றும் அமீர நாடுகளில் இப்படத்திற்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணை திறப்பு! ஈரானுக்கு டிரம்ப் இரு நாள் கெடு!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்!

சொல்லப் போனால்... கட்சிகளின் வாக்கு சதவிகிதம் என்கிற கற்பிதம்!

ரஷிய தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் மாகாணம்
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

