தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ படங்களின் மூலம் பிரபலமானவர் நானி. தெலுங்கில் வெளியான நானியின் ஜெர்ஸி, கேங்கு லீடர், சியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா, தசாரா ஆகிய படங்கள் பெரும் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நானியின் 30வது படத்தினை அறிமுக இயக்குநர் ஷௌர்யுவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஹாய் நான்னா’ எனப் பெயரிடப்பட்டு உள்ளது. வைரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்குர் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங்குக்கு காயம்!
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹீஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ளார்.
நல்ல கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கான படங்களை தேர்வு செய்து நடிக்கும் நானியின் படங்களுக்கு தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது.
இதையும் படிக்க: அனிமல்: 4வது நாள் வசூல் விவரம்!
படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டிச.7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடனம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
நடிகர் நானியுடனான கேள்வி பதில்கள் நேரத்தில் 'உங்களின் வெற்றிக்கான மந்திரம் என்ன? தயவு செய்து சொல்லுங்கள், நானும் அதை என்னுடைய களத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன்” என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு நடிகர் நானி, “எந்த மந்திரங்களையும் எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் என்னுடைய மந்திரம்” எனப் பதிலளித்துள்ளார்.
Not looking for any mantras is my mantra :)#AskNani #HiNanna https://t.co/ygiJ6NGO9d
â Hi Nani (@NameisNani) December 4, 2023
மேலும், இன்னொருவர் கேட்ட கேள்விக்கு பிரபலமான மீம்ஸில் வரும் இதுதண்டா சினிமா டெம்பிளேட்டினையும் பதிலளித்துள்ளார். உங்கள் படத்தின் க்ளைமேக்ஸ் பார்த்துவிட்டு பார்வையாளர்களின் மன்நிலை எப்படி இருக்குமென கேட்டதுக்கு இப்படி நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். இதன்மூலம் சமூக வலைதளத்தினை நடிகர் நானி, உன்னிப்பாக கவனிப்பவராக இருக்கிறார்.
â Hi Nani (@NameisNani) December 4, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!

முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி விஸ்வ நாத் சர்மா காலமானார்!

காவலர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

குத்துச்சண்டை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ப்ரீத்தி பவார்..! தங்கம் வெல்வாரா?
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



