
மஹேக் என்கிற ஹிந்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுயா பக்வத். தமிழில் ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றார். அதன்பின், நாயகியாக நடித்த ‘மதுரை சம்பவம்’ படத்திலும் கவனிக்கும்படியான நடிப்பை வழங்கியிருந்தார். தொடர்ந்து, வெளியான படங்கள் தோல்வியடைந்ததால் சினிமாவிலிருந்து விலகினார்.
தமிழ் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது, சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: ஓடிடியில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!
இந்நிலையில், சமீபத்தில் அனுயா இன்ஸ்டாகிராமில் ஒரு விடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில், “எனக்கு தமிழ் கொஞ்சம்தான் தெரியும். நான் துபையில் பிறந்தவள். என் அப்பா பக்வத் மருத்துவர். என் அம்மா பயிற்சி மருத்துவராக இருக்கிறார். பொறியியல் படிப்பு முடித்ததும் நான் சினிமாவுக்குள் வந்தேன். நான் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சுந்தர்.சி, ஹரிகுமார் மற்றும் ஜீவா ஆகியோருடன் உறவில் இருந்ததாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதெல்லாம், தவறான தகவல்கள். நான் தனியாகத்தான் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனைக் கண்ட ரசிகர்கள், “நீங்கள் ஏன் தனியாக இருக்கிறீர்கள்? திருமணம் செய்துகொள்ளலாமே?” எனக் கேள்வியெழுப்பினர். இதற்கு அனுயா, “என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை” எனப் பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.