
தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படத்திற்கு கிடைத்த வெற்றியினால் தென்னிந்தியா முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
2022இல் சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக பெறும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் வெளியான விராட பருவம் திரைப்படமும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்.
முன்னணி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் 23வது படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இந்தப் படத்தினை சந்தோ மோன்டெடி இயக்க உள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இயக்குநர் ஏற்கனவே 2018இல் நாக சைதன்யாவுடன் சாவ்யாச்சி எனும் படத்தினை இயக்கியுள்ளார். தெலுங்கு பிரேமம் எடுத்தவரும் இவர்தான்.
இதையும் படிக்க: வசூலில் அசத்தும் அனிமல்: 8வது நாளில் எவ்வளவு தெரியுமா?
இந்தப் படம் மீனவர்கள் பற்றிய படமாக இருக்குமெனவும் அதற்காக நாக சைதன்யா ஸ்ரீகாகுளம் பகுதியில் மீனவ சமூகத்தினரை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாக சைதன்யாவின் 22வது படம் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி மோசமான விமர்சனங்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 24வது படம் குஷி படம் இயக்குநருடன் அமையவிருக்கிறது.
சாய் பல்லவி தற்போது சிவ கார்த்திகேயனின் 21வது படத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவி, நாக சைதன்யாவுடன் ஏற்கனவே ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் பங்குபெற்ற நடிகை சாய்பல்லவி, “2 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பாசிட்டிவிட்டி வருவதாக நினைக்கிறேன். உங்களது ஆதரவும் வாழ்த்துகளும் கிடைக்க வேண்டும்.
இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என அனைவரும் இந்தப் படத்துக்கான ஒரு நோக்கம் இருக்கிறது. அதை சிறப்பாக எடுக்க எடுத்து சரியான முறையில் உங்களிடம் கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன். அடுத்தடுத்த நிகழ்வுகளில் உங்களை சந்திக்கிறேன். மிக்க நன்றி” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.