கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

டிமாண்டி காலனி - 2 டிரைலர் அறிவிப்பு!

'டிமாண்டி காலனி 2' படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2023, 12:25 pm

DIN

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி - பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.  சமீபத்தில் இதன் மேக்கிங் விடியோ வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் டிச.16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.