விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவுதவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

விரைவில் எனது குறும்படம் வெளியாகும்: லோகேஷ் கனகராஜ் அதிரடி பேட்டி!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:57 pm IST

லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது, லோகேஷ் ‘தலைவர் 171’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அவரே தெரிவித்திருந்தார்.  

இவரது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள 'ஃபைட் கிளப்' திரைப்படத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு  லோகேசஷ நன்றி தெரிவித்தார். அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

Story image

நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ், “ஓய்வெடுக்க 30 நாள்கள் சென்றிருந்தேன். ஆனால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் ஒரு குறும்படம் இயக்கியுள்ளேன். விரைவில் வெளியாக உள்ளது. ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

இது எல்சியூ குறித்த குறும்படமாக இருக்குமென சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.