அருண் விஜய்யின் மிஷன் சேப்டர்-1: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள மிஷன் சேப்டர்-1 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
அருண் விஜய்யின் மிஷன் சேப்டர்-1: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய்குமாரின் மகனும் தமிழில் 1995இல் முறை மாப்பிள்ளை எனும் படத்தின்  மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தகக ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார். 

இயக்குநர் ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜய்யுடன் இணைந்து மிஷன் சேப்டர்-1  ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். 

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் நிமிஷா சஜயனும் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் கவனம் ஈர்த்தது. 

அருண் விஜய் நடிப்பில், இறுதியாக வெளியான யானை, சினம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிஷன் சேப்டர்-1  ‘அச்சம் என்பது இல்லையே’ படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

படம் வரும் பொங்களுக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

பாலாவின் வணங்கான் படத்திலும் நடித்து வருகிறார். பார்டர் படம் வெளியீட்டிற்கு தாமதமாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com