புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இளையராஜா இசையில் ரவீனா ரவி, சந்தோஷ்: கவனம் ஈர்க்கும் வட்டார வழக்கு டிரைலர்!

மாமன்னன் பட நடிகை ரவீனா ரவி, ‘டூ லெட்’ சந்தோஷ் நடித்துள்ள வட்டார வழக்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :24 டிசம்பர் 2023, 5:54 am

DIN

மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடக்ஷன்ஸ் கே.கந்தசாமி மற்றும் கே. கணேசன் வழங்கும் புதிய படத்தை இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கியுள்ள படம் ‘வட்டார வழக்கு’.

‘டுலெட்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சந்தோஷ் உடன் மாமன்னன் படத்தின் மூலம் புகழ்பெற்ற நாயகி ரவீனா ரவி, வெங்கடேசன், விசித்திரன் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.  

இசையமைப்பாளர் இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். டோனிஜான், சுரேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படம் பற்றி இயக்குநரும் தயாரிப்பாளருமான கண்ணுச்சாமி ராமச்சந்திரன், “இது 1985-ல் நடப்பது போன்ற கதையைக் கொண்ட படம். உறவினர்களுக்குள் நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்துஉருவாகி இருக்கிறது.

Story image

ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் ‘வட்டார வழக்கு’ என்று தலைப்பு வைத்துள்ளோம். மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி இருக்கிறது” எனக் கூறியுள்ளார். 

படத்தின் டிரைலர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மேக்கிங் சிறப்பாக இருப்பதாக மக்கள் கமெண்டுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்தப் படம் வரும் டிச.29ஆம் தேதி வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.