2018இல் வெளியான ஆர்எக்ஸ்100 படம் தெலுங்கில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதன் ஒரிஜினலான கதை சொல்லும்பாணி வழக்கமான தெலுங்கு சினிமாவில் இருந்து மாறியிருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர்தான் அஜய் பூபதி. இவரது இரண்டாவது படம் கரோனா காலகட்டத்தில் தாமதமாகி வெளியாகியது.
தற்போது அஜய் பூபதியின் 3வது படம் மங்களவாரம். தமிழில் செவ்வாய்கிழமை. இந்தப் போஸ்டரில் கதாநாயகி பயல் ராஜ்புட் ஆடையின்றி முதுகை காண்பித்தபடி இருக்கும் போஸ்டர் வெளியாகி சர்சையானது. இந்தப் படத்தினை ஸ்வாதி, சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியப் படமாக வெளியாகியது.
இதையும் படிக்க: ஓடிடியில் அனிமல்: கூடுதலாக 8 நிமிடங்களுடன் வெளியாகும்!
இந்தப் படம் 90களில் கிராமத்தில் நடைபெறும் த்ரில்லர் கதையாக அமைந்திருந்தது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத வகைமையில் இந்தப் படம் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது. உயர்தரமான தொழில் நுட்பங்களுடன் படமாக்கி இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. காந்தாரா புகழ் இசையமைப்பாளர் அஜனீஷ் ஏக்நாத் இசையமைத்தார்.
மங்களவாரம் தமிழில் செவ்வாய்கிழமை என்ற பெயரில் வெளியானது. ஓடிடி குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. நல்ல வரவேற்பினை பெற்ற இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்வாதி ரெட்டி கூறியதாவது:
என்னுடைய உள்ளுணர்வு சொல்லியதால் இந்தப் படத்தினை தேர்வு செய்தேன். இந்தப் படத்தின் நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென நினைத்தேன். சமூக விழிப்புணர்வுள்ள படங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி. அறிமுகமாகும் முதல் படமே இப்படியாக அமைவது எனது வெற்றியாக பார்க்கிறேன். அஜய் ஒருவர் மாதிரி இயக்குநர் கிடைப்பது எனக்கு அதிர்ஷ்டம். இதை சினிமாவாக எடுப்பது அவ்வளவு எளிதானது இல்லை. நாயகி பயல் ராஜ்புட் அற்புதமாக நடித்திர்ந்தார்.

தயாரிப்பாளர் ஸ்வாதி ரெட்டி.
பெண் தயாரிப்பாளராக சினிமாவில் இருக்க இது சரியான நேரம். மரியாதை மற்றும் சமமாக நடத்தும் ஒரு விதமான பக்குவம் சினிமாவில் தற்போது வந்துள்ளது.
சமூக அக்கறையுள்ள அதே சமயம் மக்களை மகிழ்விக்கும் படங்களை தயாரிப்பதில் ஆர்வமாக இருக்கிரேன். சில கதைகள் என்னிடம் உள்ளது. ஆனால் தற்போது மங்களவாரம் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறேன்.
பெண்களின் முன்னேற்றத்துக்கு என்னுடைய முத்ரா மீடியா ஒர்கஸ் நிறுவனம் எப்பொதும் முக்கியத்துவம் அளிக்கும். எனது குடும்பம் போதியளவு எனக்குதைரியத்தை அளித்துள்ளது எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்திக் பாண்டியா இல்லை! காரணம் கூறாத பிசிசிஐ!

ஆட்ட நாயகன் விருதுக்கு ஸ்பென்சர் ஜான்சன்தான் தகுதியானவர்: மிட்செல் மார்ஷ்

பூஜையுடன் தொடங்கிய அட்டாக்கர் திரைப்படம் - புகைப்படங்கள்
இந்தியா முழுவதும் திருடுபோன 488 பழங்கால கலைப் பொருள்கள்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




