இதுதான் நான் கண்ட கனவு! ராஷ்மிகாவின் நெகிழ்ச்சிக்கு காரணம் என்ன?

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 
இதுதான் நான் கண்ட கனவு! ராஷ்மிகாவின் நெகிழ்ச்சிக்கு காரணம் என்ன?

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன.  

சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் கீதாஞ்சலி கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். அல்லு அர்ஜுன் உள்பட பலரும் இதுதான் ராஷ்மிகாவின் சிறந்த நடிப்பென பாராட்டியிருந்தார்கள். 

இந்தியாவின் நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். அனிமல் படம் பார்த்து நடிகை ஆலியா பட் நானும் க்ரஷ்மிகா சங்கத்தில் இணைகிறேன் எனக் கூறியிருந்தார். 

ரிஷப் ஷெட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி எனும் படம் டிச.30 2016ஆம் ஆண்டு வெளியானது. ராஷ்மிகாவின் முதல்படம் இது என்பதால் இன்றோடு 7 ஆண்டுகள் தனது சினிமா பயணத்தை முடித்துள்ளார் ராஷ்மிகா. 

இந்நிலையில் ராஷ்மிகா தனது எக்ஸ் பக்கத்தில் தனது 7 வருட சினிமா பயணம் குறித்த ரசிகர் ஒருவரின் பதிவுக்கு நன்றி தெரிவித்திருந்தார். பின்னர் ஒரு நீண்ட பதிவினையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் ராஷ்மிகா கூறியதாவது: 

இதெல்லாம் எப்படி நடந்தது? எப்போது நடந்தது? இதெல்லாம் ஏன் நடந்தது என சில நேரங்களில் நாம் நின்று யோசிக்க வேண்டும். இதுவரை நடந்த எல்லாவற்றுக்கும் நான் மிகவும் மகிழ்கிறேன். நடந்தவைகளுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன். இங்கிருப்பது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதுதான் நான் எப்போதும் கனவு காண்பது. நான் இதை உணரவேயில்லை. நான் எதை நோக்கி செல்கிறேன் என எனக்கே தெரியவில்லை; ஆனால் சரியான நபர்களுடன் பயணிக்கும்போது சற்று நின்று யோசித்தால் இதுதான் நாம் அடைய வேண்டிய இலக்கு எனப் புரிகிறது. சிறிய பெண்ணாக இருக்கும்போதிருந்து நான் கண்ட கனவு இதுதான் எனக் கூறியுள்ளார். 

அனிமல் படத்துக்குப் பிறகு ராஷ்மிகா புஷ்பா 2, ரெய்ன்போ, தி கேர்ள் பிரண்டு, சாவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com