
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. சில காட்சிகள் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது.
இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு மனம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து. ஆனால் படம் மீண்டும் எப்பொழுது துவங்கும் என்பது தெரியாமல் இருந்தது.
இதையும் படிக்க: நடிகை தமன்னா சாமியார் தோற்றத்தில் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. அதேபோல் விகரம் நடித்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி பெற்றது. விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: 'அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என ஒன்று இல்லை’- மைக்கேல் இயக்குநர் அதிரடி கருத்து!
இந்நிலையில் இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் துருவநட்சத்திரம் பற்றி கூறியுள்ளார். இந்தப்படம் இன்னும் 10 படங்கள் எடுக்கும் அளவுக்கான கதைக்களத்தை கொண்டது. இந்தப் படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
சோனி தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஜான் விரைவில் உங்களை சந்திப்பார்” என கூறியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.