மருத்துவமனை காட்சிகளில்கூட மேக்கப் போட்டுக்கொண்டு ஒரு நடிகை நடிக்கிறார் என மாளவிகா பெயர் குறிப்பிடாமல் நேர்காணல் ஒன்றில் பேசியதற்கு நடிகை நயன்தாரா எதிர்வினை ஆற்றியிருந்தார்.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் கடந்தாண்டு டிச.22ஆம் நாள் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தின் புரோமோஷன் நேர்காணலில் பங்குபெற்ற நயன்தாரா “ஒரு நடிகை (மாளவிகா மோகனன்) நான் நடித்த ஒரு மருத்துவமனைக் காட்சியைக் குறிப்பிட்டு, ‘உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு தலைமுடி கலையாமல் படுத்திருக்க முடியுமா? எனக் கூறினார். அது கலைப் படம் அல்ல. அந்த நடிகை விரும்பியதுபோல் தோற்றமளிக்க. நான் நடித்தது ஒரு கமர்சியல் படம். அதில் என் இயக்குநர் அதீத சோகம் வேண்டாம் என்று என்னை அப்படி நடிக்க வைத்தார். கமர்சியல் படமென்றால் அப்படித்தான் இருக்கும்” என பதிலளித்துள்ளார்.

அப்போது இந்த விடியோக்கள் வைரலானது. இந்த சர்ச்சைக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிகை நயன் தாராவை சீண்டும் விதமான மாளவிகா மோகனன் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த நேர்காணலில் மாளவிகாவிடம் லேடி சூப்பர் ஸ்டார் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு மாளவிகா, “உண்மையாகவே எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கையில்லை. பெண்களை சூப்பர் ஸ்டார் என அழைக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன என எனக்குத் தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் என அழைத்தால் போதுமே. தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்கள்தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே” எனக் கூறியுள்ளார்.
Dont Call As Lady Super #MalavikaMohanan pic.twitter.com/OS3wTml8j4
â chettyrajubhai (@chettyrajubhai) February 11, 2023
சில ரசிகர்கள் மாளவிகா சொல்வது சரியென்றும் சிலர் நயனுக்கு ஆதரவாகவும் கருத்துகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட கொரியாவுடன் அமைதிப் பேச்சு - தென் கொரிய அதிபா்

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 16) - கும்ப ராசிக்கு வெற்றி!

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை ஆண்டு விழா
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



