'லேடி சூப்பர் ஸ்டார்' குறித்து நயன் தாரா மற்றும் மாளவிகா மோகனன் இருவருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்த சர்ச்சைகளுக்கு மாளவிகா மோகன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் கடந்தாண்டு டிச.22ஆம் நாள் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தின் புரோமோஷன் நேர்காணலில் பங்குபெற்ற நயன்தாரா, “ஒரு நடிகை (மாளவிகா மோகனன்) நான் நடித்த ஒரு மருத்துவமனைக் காட்சியைக் குறிப்பிட்டு, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு தலைமுடி கலையாமல் படுத்திருக்க முடியுமா? எனக் கூறினார். அது கலைப் படம் அல்ல. அந்த நடிகை விரும்பியதுபோல் தோற்றமளிக்க. நான் நடித்தது ஒரு கமர்சியல் படம். அதில் என் இயக்குநர் அதீத சோகம் வேண்டாம் என்று என்னை அப்படி நடிக்க வைத்தார். கமர்சியல் படமென்றால் அப்படித்தான் இருக்கும்” என பதிலளித்தார்
அப்போது இந்த விடியோக்கள் வைரலானது. இந்த சர்சைக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிகை நயன் தாராவை சீண்டும் விதமான மாளவிகா மோகனன் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளதாக விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த நேர்காணலில் மாளவிகாவிடம் லேடி சூப்பர் ஸ்டார் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு மாளவிகா, “உண்மையாகவே எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கையில்லை. பெண்களை சூப்பர் ஸ்டார் என அழைக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன என எனக்குத் தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் என அழைத்தால் போதுமே. தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்கள்தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே” எனக் கூறினார்.
நடிகை மாளவிகாவின் இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் மாளவிகா, லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவை விமர்சனம் செய்கிறார் என்று சமூக வலைதளங்களில் சர்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
My comment was about a term that is used to describe female actors & not about any specific actor. I really respect & admire Nayanthara, and as a senior really look upto her incredible journey. Can people please calm down. Especially the tabloid journos.
â Christy (@MalavikaM_) February 12, 2023
Only to Miss N https://t.co/QyrfqOoJWU
இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்ப்புள்ளி வைக்கும் விதமாக மாளவிகா மோகனன் சுட்டுரையில் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: கவினின் ‘டாடா’: 3 நாள்களில் வசூல் வேட்டை!
அந்தப் பதிவில், "எந்த ஒரு நடிகையை குறிப்பிட்டு கருத்து கூறவில்லை. பெண் நடிகைகளைப் பற்றி என்னுடைய கருத்தை நான் தெரிவித்தேன். நயன் தாராவை மிகவும் நான் மதிக்கிறேன். மேலும் ஒரு மூத்த நடிகையாக அவரது நம்பிக்கையூட்டும் திரையுலக பயணத்தை நான் வியந்து பார்க்கிறேன். தயவு செய்து மக்கள் அமைதியாக இருங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலைக்கு வீ த லீடா்ஸ் சாா்பில் சங்ககிரியில் மரியாதை

பேராலயத் திருவிழா! மும்பை-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்!

பயிா்க்கடனை முழுவதும் ரத்து செய்ய வலியுறுத்தி மலை மாவட்ட விவசாயிகள் சங்க கண்டனக் கூட்டம்

புதுச்சேரி ஜிப்மரில் இளைஞரின் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



