ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமௌலி மதம் பற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது.நடிகா்கள் ராம் சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இதையும் படிக்க: இணையத்தை ஆக்கிரமிக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்!
தி நியூ யார்க்கர் பேட்டியில் ராஜமௌலி “எனக்கும் கடவுள் நம்பிக்கையில்லை. ஆனால் என்னுடைய கருத்தை படத்தில் திணிக்க விரும்பமாட்டேன். சினிமா வணிக ரீதியிலானது. மக்கள் விரும்புகிறார்கள் அதனால் அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். அது என் வேலை அவ்வளவே. நான் கடவுள் நம்பிக்கையற்றவன். மதம் என்பது சுரண்டல் தன்மையுடையது...” எனக் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு பல்ரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். கங்கனா கூறியதாவது:
உலகம் அவர் மீது விமர்சனம் வைக்கும் அளவுக்கு அவர் என்ன செய்துவிட்டார்?தயவு செய்து சொல்லுங்கள். நமது தொலைந்து போன நாகரீகத்தை பாகுபலி படமாக எடுத்ததற்காவா? அல்லது ஆர்ஆர்ஆர் போன்ற தேசியவாத படத்தினை எடுத்ததற்காவா? சர்வதேச சிவப்பு கம்பள வரவேற்பில் வேஷ்டி சட்டை அணிந்ததற்காவா?
இதையும் படிக்க: ‘மைக்கேல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!
அவர் என்ன தவறு செய்தார் தெரியும். அவர் இந்த நாட்டினை காதலிக்கிறார். உள்ளூர் சினிமாவை உலக சினிமாவிற்கு கொண்டு சென்றார். அவர் இந்த நாட்டிற்கு அர்பணிப்புடன் இருந்துள்ளார். அதுதான் அவர் செய்த தவறு. ஆனால் எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த நாட்டிலுள்ளவர்கள் அவரது நேர்மையை கேள்வி கேட்கலாம்? உங்களுக்கு அசிங்கமாக இல்லையா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



