
இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் நடிகை ரெஜினா கேசன்ட்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு ‘சூர்ப்பனகை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2021இல் இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. அப்போதே வெளியாக வேண்டிய படம் தள்ளிப்போனது.
ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் திரையரங்கம் மற்றும் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை எஸ்பி சினிமாஸ் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
ஜெயபிரகாஷ், மன்சூர் அலிகான், அக்ஷரா கௌடா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று தற்போது மீண்டும் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் தலைப்பு ராமாயணம் காவியத்தில் ராவணனின் தங்கை கதாபாத்திரத்தின் பெயரை வைத்துள்ளனர். இதில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.