
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை அமலா பால். கடந்த 2010-இல் தமிழ் திரைப்பட துறையில், "வீரசேகரன்' என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் "சிந்து சமவெளி', "மைனா', "தெய்வத் திருமகள்', "தலைவா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தனுஷ் உடன் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் பெரும் வெற்றி அடைந்தது.
தற்போது கதாநாயகியாக தனித்து நடித்து வருகிறார். ஆடை என்ற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக தனித்து நடித்தார். பின்னர் பல்வேறு ஓடிடி இணையத் தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது படமான ‘தீ டீச்சர்’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களையே பெற்றது.
மலையாளத்தில் 'ஆடுஜீவிதம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் 'அதோ அந்த பறவை போல' படமும் ரிலீஸீக்கு காத்திருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் அமலாபால் தற்போது மழையில் நனைந்தபடி பூக்களுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.
இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 30 நிமிடத்தில் 50ஆயிரத்தும் மேற்பட்ட லைக்குகளை அள்ளி வருகிறது.
ரசிகர்கள் கமெண்டில் ஹார்டின்களை பறக்கவிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.