
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவருடைய அடுத்ததடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. மணிரத்னம் - கமல்ஹாசன் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கமல்ஹாசனின் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024ஆம் ஆண்டு படம் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மன்மதன் அம்பு, தூங்காவனம் படத்தில் நடித்துள்ளார். 3வது முறையாக ஜோடி சேர்வார் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 67 படத்திலும், அடுத்த அஜித் படத்திலும் த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.