பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீரியல் பக்கம் வந்த ரசிகர்கள்!

வெள்ளித் திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத் திரை நட்சத்திரங்களும் தற்போது கொண்டாடப்படுகின்றனர். 
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீரியல் பக்கம் வந்த ரசிகர்கள்!


வெள்ளித் திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத் திரை நட்சத்திரங்களும் தற்போது கொண்டாடப்படுகின்றனர். 

வெள்ளித் திரையிலிருந்து சின்னத் திரைக்கு வரும் நடிகர்கள் சென்று, பலர் சின்னத் திரையிலிருந்து வெள்ளித் திரைக்கும் நடிக்கச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே பல ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத் திரை தொடர்களின் பக்கம் மக்களை இழுத்ததற்கு தற்போதைய தலைமுறைக்கு ஏற்ப கதைக்களம் அமைக்கப்பட்டு வரும் சின்னத் திரை தொடர்கள் காரணம் எனவும் கூறலாம்.

எனினும் அவை கலவையான விமர்சனங்களையே பெறுகின்றனர். அதாவது சிலநேரங்களில் எதிர்மறை கருத்துகளைக் கூட அவை தாங்கி நிற்கின்றன. 

இதிலிருந்து வேறுபட்டு நிற்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர். இந்த தொடரில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பெண்களின் மேம்பாட்டை மட்டுக்கு தேவையான காட்சிகளை மட்டுமே திரைக்கதையாக தாங்கி நிற்கின்றன. 

ஆள் கடத்தல், சூனியம், கோயில் பரிகாரங்கள் என சில தொடர்கள் இப்போதும் ஒளிபரப்பாகின்றன. ஆனால், முழுக்க முழுக்க பெண்கள் மேம்பாடை மையமாக வைத்து அமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் எதிர்நீச்சல் தொடரில் அமைந்துள்ளன. 

இதனால், அனைத்து வயது மக்களும் இந்த தொடரை விரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் வரும் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் நிலவும் பழமைவாதம், ஆணாதிக்கம் குறித்து காட்சிகள் அமைக்கப்படுவது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த கதாபாத்திரம் இளைய தலைமுறையினர் மத்தியில் மீம்ஸ்களாகவும் வலம் வருகின்றன. இந்த தொடரை இயக்குநர் திருச்செல்வம் இயக்குகிறார். இவர் கோலங்கள் தொடரை இயக்கியவர். 

திருச்செல்வம்
திருச்செல்வம்

இதனிடையே எதிர்நீச்சல் தொடர் எடுத்ததன் பலனாக தான் கருதுவது எதை என்பது குறித்து இயக்குநர் திருச்செல்வம் பேசினார். அதில், பலர் பல ஆண்டுகளுக்குப் பிறகு சீரியல் பார்க்கத் தொடங்கியுள்ளேன். எதிர்நீச்சல் தொடரை எதேர்ச்சையாக பார்த்த பிறகு, மிகவும் பிடித்ததால், தொடர்ந்து சீரியல் பார்த்து வருகிறேன் எனக் குறிப்பிட்டார். 

சமீபத்தில் வெளியான எதிர்நீச்சல் முன்னோட்டக் (புரோமோ) காட்சிகளுக்கும் ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறனர். அதில் பலர் இயக்குநர் திருச்செல்வம் கூறிய கருத்தை பதிவிட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com