கோல்டன் குளோப் விருதை வென்றது ‘நாட்டுக் கூத்து’ பாடல்

ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
கோல்டன் குளோப் விருதை வென்றது ‘நாட்டுக் கூத்து’ பாடல்

ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டுக் கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டிருந்தது.

இந்த கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு கூத்து பாடல் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் நாட்டு கூத்து.

இந்நிலையில், இந்தாண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை நாட்டு கூத்து பாடல் வென்றது.

இந்த நிகழ்வில் ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமெளலி, ராம்சரண், ஜூனியா் என்டிஆா், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதை பெற்றனர்.

மேலும், 95-ஆவது ஆஸ்கா் விழாவுக்கும் ஒரிஜினல் பாடல் பிரிவின் இறுதிப் பட்டியலுக்கு நாட்டு கூத்து பாடல் தேர்வாகியுள்ளது. இந்த விழா மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com