
’வாரிசு’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், குஷ்பு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: அழகை கேலி செய்தவருக்கு சமந்தா பதிலடி!
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதனால், இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , ‘படம் சிறப்பாக வந்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் கண்டனர்.’ எனத் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் ‘விஜய் 67’ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...