பிரபல ஹிந்தி நடிகை திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ராக்கி சாவந்த்(44). நாயகியாகவும் நடன இயக்குநராகவும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.
தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தவர் அதன்பின் தமிழ் மொழி படங்களில் நடிக்கவில்லை.
இதையும் படிக்க: ’இது துணிவு பொங்கல்..’ கொண்டாட்டத்தில் எச்.வினோத்!
ராக்கி சாவந்துக்கும் ரிதீஷ் சிங் என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், 2022-ல் விவாகரத்துப் பெற்றனர்.
இதன்பின், அதில் துல்ரானி என்பவரை காதலித்து வந்த ராக்கி சாவந்த் தற்போது திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளார். மேலும், ராக்கி சாவந்த் இஸ்லாமியராக மதம் மாறி தன் பெயரை ஃபாத்திமா என மாற்றிக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.