'வாத்தி’ வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு?

நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
'வாத்தி’ வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு?

நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி மீண்டும் ஒத்திவைக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிப்ரவரி முதல்வாரத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com