‘ஓடிடியில் படம் பார்ப்பது ரெளடித்தனம்’: இயக்குநர் மிஷ்கின்

ஓடிடியில் திரைப்படம் பார்ப்பது ரெளடித்தனம் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கின்
இயக்குநர் மிஷ்கின்

ஓடிடியில் திரைப்படம் பார்ப்பது ரெளடித்தனம் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி நாயகனாக நடித்திருக்கக்கூடிய வெள்ளிமலை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. 

சூப்பர்ப் கிரேஷன்ஸ் நிறுவனத்தின் ராஜகோபால் இளங்கோவன் தயாரிப்பில் இயக்குனர் ஓம் விஜய் இயக்கியுள்ள திரைப்படம் வெள்ளிமலை. இந்தப் படத்தில் சூப்பர் குட் சுப்ரமணி நாயகனாக நடித்துள்ளார். ரகுநந்தன் இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னுடைய முதல் படம் வந்தது போல எளிமையாக உள்ளது. இந்த வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. எப்படி வாழ்ந்து தீர்ப்பது எனத் தெரியவில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரே இடம் திரையரங்குதான். இது போன்ற படங்களை தியேட்டரில் பார்க்க வேண்டும். ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்பது ரவுடித்தனம். சாமி இல்லாத ஒரே இடம் தியேட்டர்தான்” எனத் தெரிவித்தார்.

இந்தத் திரைப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திண்டுக்கல் ஐ. லியோனி, பேரரசு.ஆர்.கே.செல்வமணி, வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com