இந்தியாவில் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ எனத் தொடங்கும் பாடல், சிறந்த பாடலுக்கான பிரிவில் அமெரிக்காவின் ‘கோல்டன் குளோப்’ விருதை வென்றுள்ளது.
இயக்குநா் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கு நடிகா்கள் ராம் சரண் மற்றும் ஜூனியா் என்டிஆர் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உருவானது. கடந்தாண்டு மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இப்படத்துக்கு எம். எம். கீரவாணி இசையமைத்தாா்.
இதையும் படிக்க: தேசிய விருது பெற்ற இயக்குநர் படத்தில் விஜய் தேவரகொண்டா!
திரையுலகின் உயரிய விருதுகளாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ மற்றும் ‘ஆஸ்கா்’ விருதுகளுக்கு பல்வேறு பிரிவுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் போட்டியிட்டது. ஹாலிவுட் சீசனின் தொடக்க விழா எனக் கருதப்படும் அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருதுக்கு சிறந்த பிறமொழிப் படம் மற்றும் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் ஆா்ஆா்ஆா் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல ஹாலிவுட் இயக்குநரும் ஆஸ்கர் விருது வென்ற ஸ்டீவன் ஃபீல்பெர்க்கை சந்தித்துள்ளார் ராஜமௌலி. அவரை சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில், “கடவுளை சந்தித்தேன்” என பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.