விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
சின்னத் திரை தொடர்களில், பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு உருவாக்கமாக பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். இதற்கு முன்பு ஜெனிபர் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அம்மன் தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரேஷ்மாவிடம் பேச்சு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அழுத்தமான கதாபாத்திரம் என்பதால், பாக்கியலட்சுமி தொடரில் ரேஷ்மா நடிப்பாரா? விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.