உலகளவிலான வசூல்: ஜேம்ஸ் கேம்ரூனின் புதிய சாதனை!

அவதார் (2.92 பில்லியன் டாலர்), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2.7 பில்லியன் டாலர்), டைட்டானிக் (2.19 பில்லியன் டாலர்) ஆகிய படங்களே அதிக வசூலைப் பெற்றுள்ளன.
மனைவியுடன் ஜேம்ஸ் கேம்ரூன் (கோப்புப் படம்)
மனைவியுடன் ஜேம்ஸ் கேம்ரூன் (கோப்புப் படம்)

2009-ம் ஆண்டு வெளிவந்த படம் அவதார். இயக்கம் - ஜேம்ஸ் கேம்ரூன். அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என அறிவித்தார்.

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (அவதார் 2) படத்தின் படப்பிடிப்பை 2017-ம் வருடம் செப்டம்பர் மாதம் ஆரம்பித்தார் ஜேம்ஸ் கேம்ரூன். சமீபத்தில் டிசம்பர் 16 அன்று வெளியானது அவதார் 2.சேம் வொர்திங்டன், ஸோ சல்டானா, வீவர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

இந்நிலையில் அவதார் 2 படம் உலகளவில் 2.117 பில்லியன் டாலர் வசூலை அள்ளியுள்ளது. அதாவது ரூ. 17,251 கோடி வசூல்! இதன்மூலம் உலகளவில் அதிக வசூலை அள்ளிய படங்களில் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

அவதார் 2 படத்தை விடவும் அவதார் (2.92 பில்லியன் டாலர்), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2.7 பில்லியன் டாலர்), டைட்டானிக் (2.19 பில்லியன் டாலர்) ஆகிய படங்களே அதிக வசூலைப் பெற்றுள்ளன. 2.071 பில்லியன் டாலர் வசூலைக் கொண்ட ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் படத்தின் வசூலைச் சமீபத்தில் தாண்டியது அவதார் 2 படம். 

தி டெர்மினேட்டர், ட்ரூ லைஸ், டைட்டானில், அவதார், அவதார் 2 போன்ற மகத்தான, அதிக வசூலைக் குவித்த படங்களை இயக்கியவர் ஜேம்ஸ் கேம்ரூன். தற்போது உலகளவில் அதிக வசூலைக் கொண்ட முதல் நான்கு படங்களில் மூன்று படங்களை இயக்கிய பெருமையை அவர் அடைந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com