பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

விஜய் ரசிகர்களின் கவனத்திற்கு.. அடுத்த 6 மணிநேரம் பட்டாசாக இருக்குமாம்!

அடுத்த 6 மணிநேரம் பட்டாசாக இருக்கும் என்று தளபதி 67 படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published On :

அடுத்த 6 மணிநேரம் பட்டாசாக இருக்கும் என்று தளபதி 67 படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படம் வெளியான நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது.

நடிகர் விஜய்யுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள தளபதி 67 படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார்.

கடந்த ஜனவரி 2ஆம் தேதி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

ஒரு மாதமாக கொடைக்கானல் மற்றும் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காஷ்மீருக்கு தனிவிமானம் மூலம் சென்றனர்.

இந்நிலையில், அடுத்த 6 மணிநேரம் பட்டாசாகம் இருக்கும் என்று படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அடுத்த சில மணித்துளிகளில் பிரபல நடிகர் சஞ்சய் தத், தளபதி 67-ல் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அடுத்த 6 மணிநேரத்திற்கு சிறிய இடைவெளிகளில் படத்தில் நடிக்கும் நடிகர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

இந்த பதிவு விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.