அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். குறிப்பாக பாகுபலி திரைப்படத்தின் வெற்றி அனுஷ்காவை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக்கியது.
சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப்படம் அனுஷ்காவின் 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிரவ் ஷா ஒளிப்பதிவில் பி.மகேஷ்பாபு இயக்கத்தில் அனுஷ்கா, நவின் பாலிஷெட்டி இணைந்து நடித்துள்ளனர். மேலும், ஜெய சுதா, முரளி ஷெர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: சூப்பர் சிங்கர் நடுவராக பிரபல இசையமைப்பாளர்!
இந்நிலையில், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Keep your tissues ready, cos you're about to cry with
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.