
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: மாமன்னன் ரணங்களாலும் வலிகளாலும் காணப்பெற்ற பெருங்கனவு: இயக்குநர் லெனின் பாரதி பாராட்டு!
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: வெளியானது கமல்ஹாசன் - 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில் படக்குழு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
நடிகர் விக்ரம் நெகிழ்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...