சந்திரமுகி - 2 திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி-1 திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி. மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை(செப்.19) முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை தொடங்கியுள்ளார். அதற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சுப்ரமணியபுரம்: 15 ஆண்டுகள்!
அதில், “ராகவா லாரன்ஸ் வேட்டையானாக மாறி சந்திரமுகி 2க்கு டப்பிங் பேசுகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vettaiyan Raja Paraak Paraak Paraak! Raghava Lawrence transforms as vettaiyan and starts dubbing for Chandramukhi 2 from today @offl_Lawrence
â Lyca Productions (@LycaProductions) July 3, 2023
Releasing in Tamil, Hindi, Telugu, Malayalam & Kannada!#Chandramukhi2
#PVasu
@mmkeeravaani
@RDRajasekar
#ThottaTharani⦠pic.twitter.com/m8h1hGspAi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் கூகுள் 11 ஸ்மார்ட்போன்! சிறப்புகள் என்னென்ன?

எமோஷனல் இன்டெலிஜென்ஸ்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



