ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து!

நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்காவில் நடைபெற்ற வந்த படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்காவில் நடைபெற்ற வந்த படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாருக்கான் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் சினிமா படப்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஷாருக்கானுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் ஷாருக்கானுக்கு மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஷாருக்கான் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த விபத்து குறித்த தகவல் ஷாருக்கான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தனுஷ் - 50 புதிய அப்டேட்

பதான் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ஷாருக்கான், ஜவான் மற்றும் தங்ஹி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com