எதிர் நீச்சல் சீரியல் நடிகர் நடித்துள்ள படங்கள்!

எதிர் நீச்சல் சீரியல் நடிகர் நடித்துள்ள படங்கள்!

எதிர்நீச்சல் தொடரில் அருண் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சாணக்யா நடித்துள்ள திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். 
Published on

எதிர்நீச்சல் தொடரில் அருண் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சாணக்யா நடித்துள்ள திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் முதலிடத்தில் நீடித்து வந்த கயல் தொடரை பின்னுக்குத் தள்ளி எதிர்நீச்சல் தொடர் முதலிடம் வகித்து வருகிறது. 

எதிர்நீச்சல் தொடருக்கு இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தத் தொடரில் கரிகாலன் - ஆதிரை திருமண காட்சிகள் அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்றது. 

ஆதிரையை காதலிப்பதாக எதிர்நீச்சல் தொடரில் அருண் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சாணக்யா. இவர் சிறுவயது முதலே திரைப்படங்களிலும் சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 

சின்னத் திரை நடிகை கீதா ஸ்ரீயின் மகன் சாணக்யா. இதனால், மெட்டி ஒலியில் முதல்முதலாக அறிமுகமானார். அதில் கோபியின் மகனாக நடித்திருந்தார்.

பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடிகை அசினுடன் விளம்பர படப்பிடிப்புக் காட்சியில் நடித்திருந்தார்.

அஜித் நடிப்பில் வெளியான பரமசிவம் படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார். மலையாள திரைப்படமான ஒரு கடல் படத்திலும், 
அவள் பெயர் தமிழரசி படத்தில் நாயகன் ஜெய் உடைய சிறுவயது பாத்திரத்தில் நடித்திந்தார்.

அதனைத் தொடர்ந்து பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். 
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரிலும் நடித்து வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com