பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை!

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: ஆதிபுருஷ் வசனகர்த்தா உருக்கம்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார். 

Published On :

ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன் உள்ளிட்ட பலர்  நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16இல் திரையரங்குகளில் வெளியாகி சில நாள்களிலே ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. 

படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி அமைப்புகள், வசனங்கள், கதாபாத்திரங்களை உருவகப்படுத்தியுள்ள விதம் உள்ளிட்டவை ஹிந்து மதத்தை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக வட மாநிலங்களில் படத்துக்கு எதிர்ப்பு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் படிப்படியாக வசூலில் பாதிப்படைந்ததாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டஷிர் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

ஆதிபுருஷ் படத்தினால் மக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறேன். இரு கைகளையும் கூப்பி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கடவுள் அனுமன் நம்மை ஒற்றுமையாக வைத்திருப்பார். மேலும் நமது புனிதமான நாடு, சனாதனம் ஆகியவற்றிற்கு உழைக்க நமக்கு சக்தியையும் வழங்குவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.