எனக்கு பிரியா பவானி சங்கர் போட்டியில்லை: வாணி போஜன்

நடிகை பிரியா பவானி சங்கர் தனக்கு போட்டியில்லை என நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.
எனக்கு பிரியா பவானி சங்கர் போட்டியில்லை: வாணி போஜன்

ஊட்டியில் பிறந்த வாணி போஜன் தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக தெய்வமகள் சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.  பின்னர் 2019இல் தெலுங்கில் ’மீக்கு மாத்திரமே செப்தா’ எனும் படத்திலும் 2022-ல் ’தமிழில் ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

மேலும், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள்,  போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘செங்களம்’ இணையத்தொடரும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 

நடிகர் பரத்துடன் இவர் நடித்த ‘லவ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், லவ் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வாணி போஜனிடம், ’பிரியா பவானி சங்கர் உங்களுக்கு போட்டி நடிகையா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு வாணி, ‘என்னைப் போலவே பிரியா பவானி சங்கரும் சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்குள் வந்தவர். இப்போது முன்னணி நடிகர்களுடன் நிறைய படங்களில் நடிக்கிறார். ஒரு தோழியாக எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் வழியில் அவரும் என் வழியில் நானும் சென்றுகொண்டிருக்கிறோம். இதில் போட்டி, பொறாமை என எதுவுமில்லை’ எனப் பதிலளித்தார்.

பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com