நற்பணி மன்றம் தொடங்கிய நடிகர் விஷ்ணு விஷால்! 

நடிகர் விஷ்ணு விஷால் தான் நற்பணி மன்றத்தினை தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
நற்பணி மன்றம் தொடங்கிய நடிகர் விஷ்ணு விஷால்! 

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவரது பிறந்தநாளினை முன்னிட்டு 3 படங்களிலிருந்து புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான, ‘எஃப்ஐஆர்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நற்பணி மன்றம் துவங்கியுள்ளதை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

"என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ''விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்" என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.! 

இதன் தலைவராக திரு.சீத்தாராம் அவர்களும், செயலாளராக திரு.கே.வி.துரை அவர்களும் செயல்பட இருக்கிறார்கள். இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். (விஷ்ணு விஷால் நற்பணி மன்ற தொடர்புக்கு : +91 7305111636 - 044 35012698) 

அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறோம். இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஒட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி; விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் திட்டிவருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!" எனத் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com