மலையாளத்தில் ரீமேக்காகும் மிஸ்டர் மனைவி சீரியல்!

தமிழில் இந்தத் தொடருக்கு அதிக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது இந்தக் கதை மலையாளத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. 
மலையாளத்தில் ரீமேக்காகும் மிஸ்டர் மனைவி சீரியல்!


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் மனைவி தொடர் மலையாளத்தில் மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது. தமிழில் இந்தத் தொடருக்கு அதிக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது இந்தக் கதை மலையாளத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் மிஸ்டர் மனைவி. இந்தத் தொடர் கடந்த மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாகிவருகிறது.  

ஜீ தமிழில் செம்பருத்தி தொடரின் வெற்றிக்கு பிறகு ஷபானா இந்தத் தொடரில் நாயகியாக நடிக்கிறார். இதனாலேயே மிஸ்டர் மனைவி தொடருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருந்துவருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் மிஸ்டர் மனைவி தொடரின் கதையும் பலரைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. வெளியில் வேலைக்குச் சென்று பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்க நினைக்கும் பெண்ணுக்கும், சமைப்பதை குறிக்கோளாக கொண்டு வீட்டில் இருந்தவாறு குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கும் ஆணுக்கும் இடையிலான கதையே மிஸ்டர் மனைவி. 

இந்தத் தொடர் சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. இந்தத் தொடரில் பல காட்சிகள் சமூகவலைதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோன்று நாயகி ஷபானா நாயகன் பவன் ரவீந்திரா இடையிலான காதல் காட்சிகள் இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. 

இந்தத் தொடர் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. நின்னிஸ்டம் என்னிஸ்டம் என்ற பெயரில் ஒளிபரப்பாகவுள்ளது. மிஸ்டர் மனைவி தொடரின் மலையாள வெர்ஷனில், சாண்ட்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் தமிழில் ஒளிபரப்பான பிரியமான தோழி தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com