
ஹிந்தி நடிகை வாமிகா கெபி தமிழில் 2016இல் மாலை நேரத்து மயக்கம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் 2023இல் ‘மாடர்ன் லவ் சென்னை’ தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ படத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: சொத்து மதிப்பு ரூ.170 கோடியா?: ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் பேட்டி!
ஹிந்தி, பஞ்சாபி மொழி படங்களில் அதிகம் நடித்து வருகிறார். சமீபத்தில் அமேசானில் வெளியான ‘ஜூப்ளி’ இணையத் தொடரில் அற்புதமாக நடித்திருந்தார். சோனி லைவிலும் ‘சார்லி சோப்ரா’ எனும் புதிய தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இதையும் படிக்க: நா ரெடி பாடலுக்கு நடனமாடிய ஷிகர் தவான்: வைரல் விடியோ!
தற்போது ஜெயம் ரவியுடன் ‘ஜீனி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துள்ள ‘இரவாக்காலம்’ இன்னும் படம் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பயம் முடியும்போது வாழ்க்கை தொடங்குகிறது” எனப் பதிவிட்டுள்ளார் வாமிகா. இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டின்களையும் தீ எமோஜிக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...