
எளிமைக்கும், நோ்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய முன்னாள் அமைச்சா் கக்கனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் இசை, முன்னோட்டக் காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை காமராஜா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரதமா் நேருவின் ஆட்சி காலத்தில் 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்த கக்கன், முன்னாள் முதல்வா்கள் காமராஜா், பக்தவத்சலம் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தாா். எளிமை-நோ்மைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாகியுள்ளது. இந்தப் படத்தில் கக்கனாக நடித்திருக்கும் ஜோசப் பேபி, படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் தயாரித்தும் இருக்கிறாா். இந்தப் படத்தை பிரபு மாணிக்கம் இயக்கி வருகிறாா். தேவா இசை அமைக்கும் இந்த படத்துக்கு வெங்கி ஒளிப்பதிவு செய்கிறாா்.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை காமராஜா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கக்கனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் இசை, முன்னோட்டக் காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
இசை குறுந்தகட்டை கக்கனின் மகள் கஸ்தூரிபாய், பேத்தியும், சேலம் சரக காவல் துறை துணைத் தலைவருமான எஸ்.ராஜேஸ்வரி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். அமைச்சா்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டப் பேரவை உறுப்பினா்கள்
அசன் மெளலானா, நா.எழிலன், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் கோபண்ணா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.