
சேரன் இயக்கத்தில் வெளியான வெற்றிக் கொடி கட்டு படத்தில் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இதில் நடிகர்கள் பார்த்திபன், முரளியுடன் நடிகைகள் மீனா, மாளவிகா இணைந்து நடித்திருப்பார்கள்.
2000இல் வெளியான இந்தப் பாடலுக்கு ஷெல்ஃபி ஷாலு என்றழைக்கப்படும் ஷாலினி என்ற இன்ஸ்டா பிரபலம் ரீல்ஸ் செய்து பதிவிட்டு இருந்தார். நடிகை மாளவிகா போலவே உடையணிந்து அதேபோல நடனாமாடியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் நடிகை மாளவிகாவும் இந்த ரீல்ஸ்க்கு நேற்றிரவு, “மிகவும் நன்றாக உள்ளது” என கமெண்ட் செய்துள்ளார்.
இதையும் படிக்க: பீஸ்ட் தோல்விப் படமா? சூப்பர் ஸ்டார் பட்டமே தொல்லைதான்: ரஜினியின் வைரல் பேச்சு!
1999இல் அஜித் படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகாவிற்கு பெரிய வெற்றிப் படங்கள் அமையாமலே இருந்தது. பின்னர் வெற்றிக் கொடி கட்டு படம் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர் நடித்த திருட்டுப் பயலே திரைப்படம் நல்ல கவனம் பெற்றது.
மிஷ்கின் படத்தில் இவர் நடனம் ஆடிய வாள மீனுக்கும் விலங்க மீனுக்கும் கல்யாணம் பாடல் மிகம் புகழ்பெற்றது. நடிகை மாளவிகா கடைசியாக 2008இல் விஜய்யின் குருவி படத்திலும் சுந்தர் சியின் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிக்க: காட்ஃபாதர் படம் பார்த்த கமல் - ஏ.ஆர். ரஹ்மான்!
14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா, சிவா நடித்துள்ள கோல்மால் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரேயொரு பாடலின் மூலம் இன்றளவும் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நினைவுக்கூறப்பட்டு வரும் மாளவிகா தற்போது இன்ஸ்டாகிராமில் யோகா செய்யும் புகைப்படங்களையும் பயணம் செய்யும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...