நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானபோது சமூக வலைதளங்களில் இயக்குநர் நெல்சன் அதிகமான கிண்டல்களுக்கு உள்ளானார். அதனால் ரஜினியுடனான படம் நடக்குமா நடக்காதா என சூழல் அப்போது நிலவியது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படத்தின் 2வது பாடலான ஹுக்கும் பாடலில் ’பட்டத்தை பறிக்க 100 பேரு’ என்ற வரிகள் பேசுபொருளானது. சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் விவாததுக்குள்ளானது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இதையும் படிக்க: ருசிக்க முடிகிறதா பீட்சா-3? திரைவிமர்சனம்
நேற்று ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த், “பீஸ்ட் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. நான் கலாநிதி மாறன் அவர்களிடம் இது குறித்து விசாரித்தபோது படம் ‘நெகட்டிவ ரிவிவ் வந்தாலும் விநியோகஸ்தர்களுக்கு லாபம்தான்’ எனக் கூறினார். எனக்கு நெல்சன் மீது நம்பிக்கை இருந்தது. கதை கேட்க 10 மணிக்கு நெல்சனை வரச் சொல்லியிருந்தேன். நெல்சன் இரவு தூங்க தாமதமாகும் என்பதால் காலையில் 11 மணிக்கு வருவாரென தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நெல்சன் வரும்போது 12 மணி ஆகிவிட்டது. வந்ததும் என்ன சாப்பிடுகிறீர்கள் என கேட்டபோது, ‘நல்லதா ஒரு காஃபி இருந்த சொல்லுங்க சார்’ என்றார் நெல்சன்” என ரஜினி கலகலப்பாக பேசினார்.
மேலும், “சூப்பர் ஸ்டார் பட்டம் என்றாலே தொல்லைதான். அதை ஏற்கனவே நான் டைட்டலில் போடவேண்டாமென கூறினேன். அப்போது ரஜினி பயந்து விட்டாரென கூறினார்கள். நான் 2 பேருக்கு மட்டுமே பயப்படுவேன். ஒன்று கடவுளுக்கு இன்னொன்று நல்ல மனிதர்களுக்கு” என மாஸாக ரஜினி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.