
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.
இதையும் படிக்க: கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...: நடிகையே வியந்து பாராட்டிய இன்ஸ்டாகிராம் விடியோ!
இதையும் படிக்க: சஞ்சய் தத் விடியோவினால் எல்சியூ உறுதியானதா?- ரசிகர்கள் மீண்டும் ஆரவாரம்!
சமீபத்தில் அவர் நடிப்பில் திரையரங்கம் மற்றும் ஓடிடி முறையே வெளியீடாக வந்த ‘டீச்சர்’, ‘கடாவர்’ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பல இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். பிரபல மலையாள நாவலை படமாக எடுத்துள்ள ப்ரித்விராஜுடன் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலா பால். விரைவில் வெளியாக உள்ளது.
இன்ஸ்டாகிராமில் அமலா பால் புகைப்படங்களுக்கென்று தனி ரசிகர்கள் இருகிறார்கள். கடைசியாக ஏப்.29இல் பதிவிட்டிருந்த அமலாபால் சுமார் 11 வாரங்களுக்குப் பிறகு கடந்த வாரம்முதல் மீண்டும் தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிரத் தொடங்கியுள்ளார் அமலா பால்.
இதையும் படிக்க: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் டிரெண்டான விஜய்!
தற்போது நீலகிரியுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் சிவப்பு நிறத்தினாலான உடையை அணிந்து புலிகள் போல போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை பகிர்ந்து சிவப்பினால் ஓவியம் வரையுங்கள் என தலைப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் டார்ஸான் போல் உள்ளதெனவும் தீயாக இருக்கிறதெனவும் கமெண்ட்டுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...