மேற்குவங்கத்தை சேர்ந்த சத்யஜித் ரே இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். பெர்லின், கேன்ஸ், வெனிஸ் என முக்கியமான வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளது. காலங்கள் தாண்டியும் இவரது படங்கள் நிற்கிறதென கமல் உள்ளிட்ட பலரும் புகழ்ந்து வருகின்றனர். தேசிய விருது, பாரத் ரத்னா விருது முதல் ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல வென்றுள்ளார்.

சாருலதா பட நாயகி மாதபி முகர்ஜி
இதையும் படிக்க: டப்பிங் பணிகளை தொடங்கிய தண்டகாரண்யம் படக்குழு!
சுப்ரமணியபுரம் பட இயக்குநர் சசிகுமார்கூட சமீபத்தில் ரேவின் பாதிப்பு குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை நித்யா மேனன் தமிழில் நடிகர் சித்தர்த்துடன் 180 படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து வெப்பமட், மாலினி 22 பாளையங்கோட்டை, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் மெர்சல் படத்திலும் நாயகியாக நடித்திருப்பார்.

சத்யஜித் ரேவின் சாருலதா பட நாயகி
மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி பத்தில் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக தமிழில் தனுஷுடன் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ரூ.100 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்துவரும் நித்யா மேனன் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் கொலாம்பி, அறம் திருகல்பனா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சத்யஜித் ரேவின் சாருலதா நாயகி
இந்நிலையில் லெஜண்டரி இயக்குநர் சத்யஜித் ரேவின் சாருலதா திரைப்பட கதாநாயகியை போல அலங்காரம் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த கதாபத்திரத்தினை புரிந்து கொள்வதற்காகவும் அதிலிருந்து புதிய கதைகளை உருவாக்குவதற்காகவும் இப்படியாக மறு உருவாக்கம் செய்கிறோம் எனக் கூறியுள்ளார். மூலப்படைப்பின் ஒளிப்பதிவின் சாரத்தினை உள்நோக்கி ஆராய இந்த புதிய மறு ஆக்கங்கள் உதவுவதாகவும் கூறியுள்ளார் நித்யா மேனன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



