டப்ஸ்மாஷ், டிக்டோக், ரீல்ஸ்களில் பிரபலமானவர் மிர்ணாளினி. பின்னர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கிலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடனம் வைரலானது. பின்னர் விஷாலின் எனிமி படத்திலும் அவர் ஆடிய நடனம் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றது.

எம்ஜிஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சாம்பியன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் மிர்ணாளினி. இவரது புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள மிர்ணாளினி ரவி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். புதிய புகைப்படமொன்றுக்கு ரசிகர் ஒருவர் மிகப் பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்தின் நாயகி மிச்செல் ரோட்ரிக்வெஸ் போலவே இருக்கிறார்கள் என கமெண்ட் செய்துள்ளார்.

இந்த புதிய புகைப்படங்களுக்கு பலரும் இதய எமோஜிக்களை கமெண்ட்டுகளில் பறக்கவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே நாளில் கடைப் பதிவு, 15 நாளில் கழிவுநீா் இணைப்பு: தில்லி அரசு புதிய அறிவிப்பு

வீட்டுச் சுவா் இடிந்து தொழிலாளி பலி

பழங்குடியினா் பிரச்னையைத் தீா்க்க தொலைநோக்குத் திட்டம்: அமைச்சா் வன்னியரசு

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




