
தமிழின் சிறந்த நடிகர்களில் ஒருவரான பசுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் தண்டட்டி. இதில் ரோஹிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் 'தண்டட்டி' படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோஹிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: 2 மணி நேரத்தில் 3 லட்சம் லைக்குகள்: தீயாக பரவும் தமன்னாவின் புதிய புகைப்படங்கள்!
சமீபத்தில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதி நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் ஜூன் 23ஆம் நாள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...