இராவண கோட்டம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்யராஜின் மகன் சாந்தனு சக்கரகட்டி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சோனி இணையத் தொடரில் (ஸ்டோரி ஆஃப் திங்ஸ்) ஒன்றிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில், விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான ‘இராவண கோட்டம்’ திரைப்படம் சுமாரான படமாக அமைந்தது.
இதையும் படிக்க: லியோ - அசரடிக்கும் விநியோக உரிமைத் தொகை!
இந்நிலையில், இப்படம் வருகிற ஜூன் 16 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.