
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் இறுதி டிரைலர் வெளியாகியுள்ளது.
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ்.
இதையும் படிக்க | கஸ்டடி ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. .
இந்நிலையில், இப்படத்தின் இறுதி டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...