
சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது இவர் நடிப்பில் கடந்தாண்டு பல படங்கள் வெளியானது. சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன்?

தமிழில் 2018இல் வெளியான ராட்சசன் திரைப்படம் சிறந்த க்ரைம் தில்லர் படமாக தமிழக மக்களின் ஆதரவினை பெற்றது. இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’ திரைப்படம் மக்களின் ஆதரவினை பெற்றுள்ளது. பலரும் ராட்சசன் படத்துடன் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: குடும்பத்திற்கு வரவேற்கிறேன் அண்ணி: லாவண்யாவை வரவேற்ற வருண் தேஜின் தங்கை!
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான போர் தொழில் திரைப்படம் அடுத்தடுத்து நடக்கும் கொலைக்கான குற்றவாளியை தேடும் திரைப்படம். இதில் காவலதிகாரியாக அசோக் செல்வன், சரத் குமார் நடித்துள்ளனர். நிகிலா விமலும் சிறப்பாக நடித்துள்ளார். விக்னேஷ் ராஜா, ஆல்பிரட் பிரகாஷ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள்.
மக்களின் ஆதரவினை அடுத்து போர் தொழில் படத்திற்கு கூடுதல் காட்சிகளும் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் படத்திற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். சிலர், “ராட்சனை விட நல்ல படம்” எனவும் கூறி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...