
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை மடோனா செபாஸ்டியன் லியோவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2015இல் பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் தமிழ் ரசிகர்களின் ஆதரவினை பெற்றார். பின்னர் படங்கள் சரியாக அமையாமல் இருந்த நிலையில் தற்போது விஜய்யுடன் நடனம் ஆடியுள்ளதாகவும் முதல் பாடலில் மடோனாவின் பங்கு அதிகமிருக்குமெனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மட்டுமல்ல மடோனா செபாஸ்டியன் பாடலும் பாடுவார் என்பதால் லியோவில் பாடியிருக்கலாம் என சமூக வலைதளங்களில் இந்த தகவல் தீயாக பரவி வருகிறது. படக்குழு இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...