
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, 'தில்வாலே துல்ஹனியா லே ஜெயங்கே' திரைப்படம் இந்தியாவிலேயே அதிக நாள் திரையிடப்பட்ட(1000 வாரங்கள்) படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ரன்பீரின் அனிமல் திரைப்படத்தின் புதிய அப்டேட்!
தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ’மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின், நடிகர் அஜய் தேவ்கனை மணந்து பாலிவுட் படங்களில் முழு கவனத்தைக் கொடுத்தார். இறுதியாக, தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார்.
Taking a break from social media. pic.twitter.com/9utipkryy3
— Kajol (@itsKajolD) June 9, 2023
திடீரென நேற்று இன்ஸ்டாகிராமில் நுழைந்த கஜோல், ’என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்’ எனப் பதிவிட்டதுடன் தன் பழைய பதிவுகள் அனைத்தையும் அழித்து இன்ஸ்டாவிலிருந்து வெளியேறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The tougher the trial, the harder you come back! Catch the trailer for my courtroom drama #HotstarSpecials #TheTrial - Pyaar Kanoon Dhokha on June 12th. Coming soon only on @DisneyPlusHS@Jisshusengupta @AlyyKhan06 @ChadhaSheeba @KubbraSait @aseemjh @banijayasia @deepak30000… pic.twitter.com/nNMEJP4zDz
— Kajol (@itsKajolD) June 9, 2023
தற்போது அது 'தி ட்ரையல்' எனும் புதிய படத்திற்காக இதை செய்துள்ளதாக தெரிகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 12ஆம் தேதி இதன் டிரைலர் வெளியாகுமென கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், “இது கேவலமான புரமோஷன்”, “ரசிகர்களின் உணர்சிகளை இப்படிதான் பயன்படுத்துவீர்களா?” என விமர்சித்து வருகின்றனர்.
.@itsKajolD Shame on you for playing such a cheap stunt with your fans! We trusted and supported you, but this is a betrayal. #ShameOnKajolHotstar pic.twitter.com/vkRZ5W297k
— ASHISHA SINGH RAJPUT (@AshishaRajput19) June 10, 2023
‘ஷேம்ஆன் கஜோல் ஹாட்ஸார்’ எனும் ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...