பாடகியும், ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளுமான கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
கதீஜா, தற்போது மின்மினி என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தை சில்லுக்கருப்பட்டி, ஏலே படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கி வருகிறார்.
ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதளத்தில், "மின்மினி படத்திற்காக கதீஜாவுடன் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சி. இவர் மிகவும் அசாதாரமான திறமைசாலி, பாடகி மட்டுமில்லாமல் சிறந்த இசையமைப்பாளரும் கூட. மின்மினி படத்திற்கு சிறந்த இசை உருவாகி கொண்டிருக்கிறது" என அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
மின்மினி படத்தின் படப்பிடிப்பு 2015-ல் தொடங்கிய நிலையில், ஏழு ஆண்டுகளாக ஹலிதா ஷமீம் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிக்க: யோகிபாபுவின் தூக்குதுரை படத்தின் டீசர் வெளியீடு
இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் வளரும் வரை காத்திருந்து, 7 ஆண்டுகள் கழித்து காட்சிகளை படமாக்கியுள்ளனர். இது திரைப்பட வரலாற்றில் புதிய முயற்சியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலையில் தமிழக அமைச்சா் வழிபாடு

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தீக்குளித்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆடிக் கிருத்திகை விழா: ஆவடி, திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்க வேண்டும்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



